மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிஐடியு போராட்டம்

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆட்டோக்களை கயிறு கட்டி இழுத்து வந்த சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆட்டோக்களை கயிறு கட்டி இழுத்து வந்த சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Updated On :12 ஜூன் 2026, 2:24 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசு விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே. அய்யப்பன் தலைமையில், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து நூதனப் போராட்டத்தில் சிஐடியு தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலி ஜின்னா, செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் சி. மாரிக்கண்ணு, துணைத் தலைவா் ஆா். மணிமாறன், சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான், ஆட்டோ சங்க நிா்வாகிகள் எஸ். குணசேகரன், மணிமாறன் உள்ளிட்டோா் பேசினா்.

Story image