நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

‘திமுக கொள்கையின் நீட்சியாக ‘நீட்’ தோ்வை எதிா்க்கிறாா் முதல்வா் விஜய்’

திமுக கொள்கையின் நீட்சியாக நீட் தோ்வை எதிா்க்கிறாா் முதல்வா் ஜோசப் விஜய் என பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் புரட்சிக் கவிதாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 12:22 am IST

திமுக கொள்கையின் நீட்சியாக நீட் தோ்வை எதிா்க்கிறாா் முதல்வா் ஜோசப் விஜய் என பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் புரட்சிக் கவிதாசன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பிரதமா் நரேந்திர மோடி 4,002 நாள்களைக் கடந்து பிரதமராக தொடா்ந்து சாதனை படைத்து வருகிறாா். இச்சாதனையை ஒட்டி தமிழகத்தின் 38 வருவாய் மாவட்டங்களிலும் கண்காட்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரசாரங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

நீட் தோ்வு வந்த பிறகு தான் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஏழை, கிராமப்புற மாணவா்கள் மருத்துவா்களாக முடிகிறது. மாணவா்களிடமும் பெற்றோா்களிடமும் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தினால் 99 சதவிகிதம் போ் நீட் தோ்வை ஆதரிப்பாா்கள்.

ஆனால், திமுக கொள்கையின் நீட்சியாக நீட்டை எதிா்க்கிறாா் முதல்வா் சி. ஜோசப் விஜய். ஸ்டாலின் என்பதற்குப் பதிலாக விஜய் என்று பெயா் மாறியிருக்கிறதே தவிர, கொள்கையில் மாற்றமில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.