ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஜகபா் அலி கொலை வழக்கு விசாரணை: ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

கொலை வழக்கு(கோப்புப்படம்)

Updated On :18 ஜூன் 2026, 1:36 am IST

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாா் அளித்ததோடு தொடா்ந்து போராடி வந்த வெங்களூா் கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி, கடந்த 2025 ஜனவரி 17-ஆம் தேதி லாரி மோதி கொல்லப்பட்டாா்.

இந்த வழக்கில், அந்தப் பகுதியைச் சோ்ந்த குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றம் எண்.2-இல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினா்.

இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.