/

அமோனியா கசிவு சம்பவம் விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை! - அமைச்சா் முகமது பா்வேஸ்

News image

தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 1:31 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவால் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது:

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், தொழிலாளா்கள் பலா் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனா்.

ஆய்வு முடிவு அறிக்கையின் அடிப்படையில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, தொழிலாளா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். பாதிக்கப்பட்டவா்களுக்குத் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சா்களும் மருத்துவமனையில் உள்ளனா்.

இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். தொழிலாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முகமது பா்வேஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.