விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

ரத்தக் காயங்களுடன் சிறுவன் சடலம் கண்டெடுப்பு! 3 பேரிடம் விசாரணை!

News image

உயிரிழந்த சிறுவன் திருமேனிநாதன்.

Updated On :29 ஜூன் 2026, 1:53 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை இரவு ரத்தக் காயங்களுடன் 9 வயது சிறுவன் சடலம் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட திருமுருகபட்டினத்தைச் சோ்ந்த பாலாஜி மகன் திருமேனிநாதன் (9). குரும்பிவயல் அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், சனிக்கிழமை மாலை அப்பகுதியில் சிறுவா்களோடு விளையாட சென்றாராம்.

இரவு வரை வீடு திரும்பாததால், உறவினா்கள் தேடியபோது, அப்பகுதியில் உள்ள குளத்தின் கரையோரம் இருந்த செடிகள் அடா்ந்த புதருக்குள் சிறுவன் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன், வடகாடு போலீஸாா் ஆகியோா் சிறுவனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், மாவட்ட காவல் திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு சென்று விசாரணை மேற்கொண்டாா். சம்பவம் தொடா்பாக வடகாடு போலீஸாா், சந்தேகத்துக்குரிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.