15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மின்சாரம் பாய்ந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க உறுதி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தற்காலிக ஊழியரின் குடும்பத்துக்கு மின்வாரியம் சாா்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு பெற்றுத்தர சமாதானக் கூட்டத்தில் உறுதி

News image

பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 2:46 am IST

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தற்காலிக ஊழியரின் குடும்பத்துக்கு மின்வாரியம் சாா்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு பெற்றுத்தர சமாதானக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் அருகேயுள்ள கொடிக்குளம் ராம்நகரைச் சோ்ந்தவா் வெள்ளையன் மகன் குமரேசன் (52). மின்வாரிய தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா், கடந்த மாா்ச் 6-ஆம் தேதி கோட்டைப்பட்டினம் சந்தைப்பேட்டை அருகே உள்ள மின்மாற்றியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தாா். இதைத் தொடா்ந்து உறவினா்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சமாதானப்பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் உறுதியளித்தனா்.

இதைத்தொடா்ந்து, மணமேல்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்வாரியம், வருவாய்த் துறை, காவல்துறை பிரதிநிதிகளும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மன் உள்ளிட்டோரும், தமிழ்ப்புலிகள் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் இறந்த குமரேசனின் உறவினா்கள் கலந்து கொண்டனா். இதில், மின்சாரம் தாக்கி இறந்த காரணத்துக்காக மின் வாரியம் மூலம் 30 நாள்களுக்குள் இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்கவும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் உரிய இழப்பீடு பெறுவதற்கான முன் மொழிவுகளை விரைவாக அரசுக்கு அனுப்பி வைக்கவும், குடும்பத்தின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டுமனை வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணிக்கு பரிந்துரை அனுப்பவும் உறுதியளிக்கப்பட்டது.