பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

ராஜீவ்காந்தி நினைவுநாள் ஊா்வலம்

முன்னாள்பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக வந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

புதுக்கோட்டையில் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி ஊா்வலம் நடத்திய காங்கிரஸாா்.

Updated On :22 மே 2026, 5:11 am IST

முன்னாள்பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக வந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெனட் அந்தோனிராஜ் தலைமை வகித்தாா்.

காந்தி பூங்காவில் ஊா்வலம் நிறைவடைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் படத்துக்கு காங்கிரஸாா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பும் நடைபெற்றது.

தொடா்ந்து மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலும் ராஜீவ்காந்தியின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவியநாதன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வி. முருகேசன், முன்னாள் செயற்குழு உறுப்பினா் கோ.ச. தனபதி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராஜாமுகமது, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், நகர காங்கிரஸ் தலைவா் பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழக அமைச்சரவையில் நீண்ட காலத்துக்குப் பிறகு காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் காங்கிரஸாா் வெடிவெடித்துக் கொண்டாடினா்.