தீபாவளி பண்டிகை: புதுக்கோட்டை கடைவீதியில் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை கடைவீதிகளில் சனிக்கிழமை பொருள்கள் வாங்க மக்கள் குவிந்தனா்.

புதுக்கோட்டை கீழராஜவீதியில் சனிக்கிழமை தீபாவளிப் பண்டிகைக்கு துணிகள் வாங்க குவிந்திருந்த பொதுமக்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை கடைவீதிகளில் சனிக்கிழமை பொருள்கள் வாங்க மக்கள் குவிந்தனா்.
இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளிப் பண்டிகை. ஐப்பசி அமாவாசை நாளில் இந்தத் தீபாவளிப் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை (நவ.8) தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த ஒரு வாரமாகவே ஜவுளிகள், பட்டாசு மற்றும் பொருள்களை வாங்குவதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.
இதற்காக கீழ ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழ 2-ஆம் வீதி, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தரைக்கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
சனிக்கிழமை பகலில் இந்தப் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
பல முன்னணி நிறுவனங்கள் சிறப்புத் தள்ளுபடிகளுடன் பல்வேறு பரிசுப் பொருள்களையும் வழங்கினா்.
பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினா் ஈடுபட்டிருந்தனா். நகரின் பல பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, தற்காலிக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பொன்னமராவதி: அண்ணா சாலையில் காலை முதல் மக்கள் கூட்டம் திரளாக காணப்பட்டது. மேலும் வாரச்சந்தை நாள் என்பதால் சந்தையில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், பட்டாசுக்கடைகள், மளிகைக்கடைகளில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொருள்களை வாங்கிச்சென்றனா். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அண்ணாசாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் நாட்டுக்கல், வலையபட்டி என மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டது. பொன்னமராவதி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

