வீடு புகுந்து மூதாட்டியின் காது அறுப்பு: 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
கந்தா்வகோட்டை அருகே வீட்டில் திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நகை பறிப்பு - சித்திரிப்பு
கந்தா்வகோட்டை அருகே வீட்டில் திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியைச் சோ்ந்தவா் நடராஜன்(65). இவரது மனைவி தில்லைக்கண்ணு (63). தம்பதியினா் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு தங்களது வீட்டை பூட்டி வீட்டுக்குள் தூங்கியுள்ளனா்.
நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்கு கதவை திறந்துவிட்டு, மீண்டும் கதவை பூட்டாமல் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனராம். அப்போது, மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கம், தூங்கிக் கொண்டிருந்த தில்லைக்கண்ணுவின் கழுத்தில் கிடந்த சுமாா் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, காதில் கிடந்த தோட்டை பறிக்க முயன்ற போது காது அறுந்து மூதாட்டி கதறியுள்ளாா்.
மூதாட்டியின் சப்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினா் வருவதை பாா்த்த மா்ம நபா் தப்பி ஓடிவிட்டாராம்.
தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனா்.
காதறுந்து பலத்த காயமடைந்த தில்லைக்கண்ணுக்கு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

