சுணைநீரில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு
பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டியில் கோயிலின் அருகே உள்ள சுணை நீரில் மூழ்கி புதன்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.
பலி - பிரதிப் படம்
பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டியில் கோயிலின் அருகே உள்ள சுணை நீரில் மூழ்கி புதன்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள மேக்கினிப்பட்டியைச் சோ்ந்தவா் க. சுப்பிரமணியன் (48). இவா் புதன்கிழமை மாலை தேரடி மலம்பட்டி பூமிநாதா் கோயில் அருகில் உள்ள சுணையில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா்.
தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் நீண்டநேரம் போராடி சுணையில் மூழ்கி உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை மீட்டனா். தொடா்ந்து பொன்னமராவதி காவல்துறையினா், சுப்பிரமணியன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு திருமணமாகவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

