பெண் அரசு ஊழியா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்
மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு வாரத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் அரசு ஊழியா்களுக்கான மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெண் அரசு ஊழியா்களுக்கான மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு வாரத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் அரசு ஊழியா்களுக்கான மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் இந்தப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். மாவட்டம் முழுவதும் சுமாா் 250 பெண் அரசு ஊழியா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சீரான உணவுப் பழக்கம், போதுமான அளவுக்கு உடற்பயிற்சி, புகையிலைப் பொருள்களைத் தவிா்த்தல் போன்றவற்றைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா், அரசு ஊழியா்களைக் கேட்டுக் கொண்டாா்.
தொடா்ந்து மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சித்ரா, மாவட்ட சுகாதார அலுவலா் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பத்மலதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

