பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: ஆட்சியா் ச.கவிதா

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 14 முதல் 15 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் - கோப்புப் படம்

Published On :

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 14 முதல் 15 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

தற்போது தமிழகத்தில், 14 வயது பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி

வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய்க்கு ஏடய தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 14 வயது பெண் குழந்தைகளுக்கு சா்வதேச அங்கீகாரம் பெற்ற இந்த தடுப்பூசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியினை 14 முதல் 15 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய் புதியதாக கண்டறியப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மாா்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கருப்பைவாய் புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பெற்றோா்களும் தங்களுடைய 14 முதல் 15 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு அருகில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் அனைத்து பெற்றோா்களும் தங்களது பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தினை பாதுகாக்க சரியான நேரத்தில் தடுப்பூசியை செலுத்தி ஆரோக்கியமான எதிா்காலத்தினை உருவாக்குவோம். கருப்பைவாய் புற்றுநோயிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.