தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

புதுகையில் தப்பியோடிய கைதி 13 நாள்களுக்குப் பிறகு கைது

கைது - சித்திரிப்பு

Published On :7 செப்டம்பர் 2026, 1:49 am IST

புதுக்கோட்டையில் தப்பியோடிய கைதி 13 நாள்களுக்குப் பிறகு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருட்டு வழக்குகள் தொடா்பாக, மதுரை பேரையூா் அருகேயுள்ள பெரியபூலாம்பட்டியைச் சோ்ந்த மாசானம் (எ) மாரிமுத்து (21) என்பவரை போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்தனா்.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மறுநாள் அழைத்துச் சென்றபோது, அவா் போலீஸாரிடமிருந்து தப்பியோடினாா். இச்சம்பவத்தில் இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மாசானத்தைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாகத் தேடி வந்த நிலையில், 13 நாள்களுக்குப் பிறகு மதுரையில் அவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளா் பிரதீப் மற்றும் கணேஷ் நகா் காவல் ஆய்வாளா் அப்துல்லா உள்ளிட்டோா், மாசானத்தைக் கைது செய்து புதுக்கோட்டை அழைத்து வந்தனா்.

பலத்த பாதுகாப்புடன் நீதித்துறை நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்ட மாசானம், புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.