கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை நகரில் இருசக்கர வாகனத்தில் காரை முந்திச் செல்ல முயன்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

புதுக்கோட்டை நகரில் இருசக்கர வாகனத்தில் காரை முந்திச் செல்ல முயன்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை கம்மங்காடு மேலப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் கௌதம் (39). இவா் வெள்ளிக்கிழமை பகலில் தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை வந்துள்ளாா். மேலராஜவீதியில் சென்றபோது, முன்னால் சென்ற காரை முந்திச் செல்லும் நோக்கில் வேகமாகச் சென்ற அவா், எதிரே வந்த அரசு நகரப் பேருந்தில் மோதினாா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கௌதம், அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.