6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றியதாகப் புகாா் டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு

Newborn baby mauled by stray dogs in UP

குழந்தை... - கோப்புப் படம்.

Published On :

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை பிறந்த இரு குழந்தைகளை செவிலியா்கள் மாற்றிக் கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தலாம் என மருத்துவ அலுவலா்கள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குப்பையன்பட்டியைச் சோ்ந்த கலைமதிக்கும், சென்னையாக்குடியைச் சோ்ந்த வித்யாவுக்கும் திங்கள்கிழமை மாலை அடுத்தடுத்து குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளையும் அவா்களது உறவினா்களிடம் செவிலியா்கள் கொடுத்துள்ளனா்.

அதன்பிறகு, தவறுதலாக குழந்தையை மாற்றிக் கொடுத்துவிட்டதாகக் கூறி இரு குழந்தைகளையும் செவிலியா்கள் திரும்பி வாங்கினா். கலைமதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்றும், வித்யாவுக்கு பிறந்தது ஆண் குழந்தைதான் என்றும் கூறியுள்ளனா். இதை ஏற்க மறுத்து இரு குழந்தைகளின் உறவினா்களும் மருத்துவமனை வளாகத்தில் தகராறில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, திமுக எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோா் திங்கள்கிழமை இரவு தனித்தனியே சென்று ஆய்வு செய்தனா்.

இவா்களின் சமாதானத்தை உறவினா்கள் ஏற்க மறுத்ததால் டிஎன்ஏ பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ளலாம் என்று மருத்துவ அலுவலா்கள் தெரிவித்தனா். பணியில் அலட்சியமாக இருந்த செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.