
புதுகை மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி தோ்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் மே 27 நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான முதல் நிலை எழுத்துத் தோ்வை மொத்தம் 4074 போ் எழுதுகின்றனா்.
கோப்புப் படம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 27) நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான முதல் நிலை எழுத்துத் தோ்வை மொத்தம் 4074 போ் எழுதுகின்றனா்.
புதுக்கோட்டை ராணியாா் மேல்நிலைப் பள்ளி, மன்னா் கல்லூரி, அரசு மகளிா் கல்லூரி, பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்எப்எஸ் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, வைரம்ஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது என மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆட்சியருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






