தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை ஜன. 5-ம் தேதிக்குள் ஓரே தவணையாகச் செலுத்தினால், அபராதத் தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் அனலாக் முறையிலான ஒளிபரப்புக்கு கேபிள் டி.வி. கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்தத் தவறியதற்காக விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை தள்ளுபடி செய்தால், செலுத்த வேண்டிய அசல் சந்தா கட்டணத்தை முழுவதுமாக ஒரே தவணையில் செலுத்திவிடுவதாக தமிழக அரசுக்கு உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, சில நிபந்தனைகளுக்குட்பட்டு, அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதற்காக அபராதத் தொகை தள்ளுபடி திட்டம்"- 2017 செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அசல் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் அரசுக் கணக்கில் செலுத்தும் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் அனைவருக்கும் நிகழாண்டு அக்டோபர் மாதம் வரை உள்ள அபராதத் தொகை முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும். நிலுவையில் உள்ள அசல் சந்தா தொகை முழுவதையும் இணையவழி அல்லது வங்கி வரைவோலை மூலமாக ஜன. 5-ம் தேதிக்குள் ஒரே தவணையாகச் செலுத்த வேண்டும். பகுதி தொகைக்கான வங்கி வரைவோலை ஏற்கப்படமாட்டாது.
நிலுவையில் உள்ள அசல் சந்தா தொகையை ஒரே தவணையில் செலுத்திய உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது"என்ற சான்றை இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இச்சான்று பதிவு அஞ்சலில் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சலுகை ஒரே ஒரு முறைதான் வழங்கப்படும். எனவே, இந்த வாய்ப்பின் கேபிள் ஆபரேட்டர்கள் பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.