சாலையோர கடை வைக்க அனுமதி வேண்டும்

அறந்தாங்கி -பேராவூரணி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி  கடை வைத்துக் கொள்ள அனுமதி கோரி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 
Updated on
1 min read

அறந்தாங்கி -பேராவூரணி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி  கடை வைத்துக் கொள்ள அனுமதி கோரி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 
இதுகுறித்து அறந்தாங்கி சாலையோர தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் அ. ராஜேந்திரன் தலைமையில்  அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பி.வி. சரவணன்,  காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோரிடம் அளித்த மனு விவரம்:
அறந்தாங்கியில் பல்லாண்டுகளாக சாலையோரம் தரைக்கடை அமைத்து  வியாபாரம் செய்து வந்தோம்.  தற்போது போக்குவரத்து இடையூறு எனக் காரணம் கூறி கடை அமைக்க போலீஸார்  அனுமதி தரவில்லை.   ஆகவே எங்களுக்கு வாரச்சந்தை நடைபெறும் 2-ஆவது கேட்பகுதியில்  கடை அமைத்து நகராட்சி வசூலிக்கும் தொகையை  சத்திரம் நிர்வாகமும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். மேலும் பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை வைக்க மேற்கூரை அமைத்து வாடகை வசூலிக்காமல்  இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறின்றி சாலையோரங்களில் கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com