இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பேராவூரணி  வட்டாரத்தில் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் அளிப்பு

பேராவூரணி வட்டத்தில் 2017-18 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்,  தேசிய உணவு பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு பவர்டில்லர்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:18 pm

DIN

பேராவூரணி வட்டத்தில் 2017-18 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்,  தேசிய உணவு பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு பவர்டில்லர் மற்றும் ரோட்டவேட்டர் கருவிகள் மற்றும் உளுந்து பயிரில் செயல்விளக்கங்கள் அமைப்பதற்குண்டான இடுபொருள்கள் வழங்கும் விழா பேராவூரணி வேளாண்மை விரிவாக்க மையத்தில்  வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு  தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் முன்னிலை வகித்தார். விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்களை வழங்கி எம்எல்ஏ மா. கோவிந்தராசு பேசியது:
விவசாயிகள்,  மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களின் மானிய விவரங்களை கேட்டு முறையாக பயன் பெறுவதுடன் வேளாண்துறை அலுவலர்கள் எடுத்துக் கூறிடும் தொழில்நுட்பங்களை முறையாக கடைப்பிடித்து அதிக மகசூல் எடுக்க முனைப்பு காட்ட வேண்டும். வாழ்வில் தான் ஒரு தன்னிறைவு பெற்ற விவசாயி என நிரூபிக்க வேண்டும் என்றார். 
விழாவில் அதிமுக ஒன்றியச் செயலாளர் உ.துரைமாணிக்கம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சாந்திஅசோக்குமார்,  கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பேராவூரணி வேளாண்மை அலுவலர் இராணி,  துணை வேளாண்மை அலுவலர் சுந்தரராஜன், வேளாண்மை உதவி அலுவலர்கள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.