தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள அலமேலுபுரம் பூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அக்கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் புதன்கிழமை அலமேலுபுரம் பூண்டி கிராம விவசாயிகள் ஆர். ராமதாஸ் மற்றும் வழக்குரைஞர் வெ. ஜீவகுமார் தலைமையில் அளித்த மனு: அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் ஆழ்குழாய் மூலம் சுமார் 300 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
ஆனால், விவசாயிகளை வியாபாரிகள் ஏமாற்றி மிகவும் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக அப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகள் ஓரளவுக்குப் பயனடைவர். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்: இமாம் உல் ஹக், ஷான் மசூத் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்! எதற்கு தெரியுமா?

33 வயது நடிகை மிருணாள் தாக்குர், 24 வயது கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் டேட்டிங்?

நடிகரான இயக்குநர் - பியார் பிரேம கல்யாணம் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET


