பேருந்து கட்டண உயர்வு: குடந்தை கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு நாளொன்றுக்கு ரூ. 1.10 கோடி கூடுதல் வருவாய்
பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் வருவாய் நாளொன்றுக்கு ரூ. 1.10 கோடி அதிகரித்துள்ளது.


பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் வருவாய் நாளொன்றுக்கு ரூ. 1.10 கோடி அதிகரித்துள்ளது.
கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 2,243 புறநகர் பேருந்துகள், 1,306 நகர்ப்புற பேருந்துகளின் வழியே தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடத்துநர்கள், 9,500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், 320 கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு, எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணிகளை கருத்தில்கொண்டும், தொடர்ந்து ரூ.20,488 கோடி நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்து கழகங்களை காப்பாற்றும் விதமாகவும் தமிழக அரசு கடந்த 19-ஆம் தேதி பேருந்து பயண கட்டணங்களை உயர்த்தியது.
இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கட்டண உயர்வால் போக்குவரத்து கழகங்கள் தற்போது நஷ்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகத்தில் கட்டண உயர்வுக்குப் பின்னர் வருமானம் ரூ.4.50 கோடியாக உயர்ந்து, அதீத நஷ்டத்திலிருந்து சற்று மீண்டு வருகிறது. இதன் வழியாக போக்குவரத்து கழகத்திற்கு அரசு மானியமாக அளிக்கும் பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் மிச்சப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து போக்குவரத்து கழக உயரதிகாரிகள் கூறியது: கும்பகோணம் கோட்டப் பேருந்து ஒன்று நாளொன்றுக்கு சராசரியாக 484 கி.மீ. இயக்கப்படுகிறது. கோட்டத்தில் உள்ள 3,500 பேருந்துகளும் நாளொன்றுக்கு சுமார் 14 லட்சம் கி.மீ. பயணிக்கின்றன.
உயர்ந்து வரும் எரிபொருள் விலை, பணியாளர்களின் சம்பளம், அதிகரித்து வரும் பேருந்து இயக்க செலவால் கும்பகோணம் கோட்டம் மாதத்திற்கு ரூ.6.94 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வால் வருமானம் கூடி, நஷ்டம் குறைந்து வருகிறது. கும்பகோணம் கோட்டத்தில் கடந்த காலங்களில் நாளொன்றுக்கு ரூ.3.40 கோடியாக இருந்த வருமானம், அரசின் பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு ரூ.4.50 கோடியாக உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள்கள், விசேஷ நாள்களில் இந்த வருமானம் இரட்டிப்பாகும். இதன் மூலம் மொத்த நஷ்டத்தில் 65 சதவீதம் வரை (அதாவது சுமார் ரூ.4 கோடி அளவுக்கு) குறையத் தொடங்கியுள்ளது.
ரூ.3.40 கோடியாக இருந்த வருமானம், பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு நாளொன்றுக்கு ரூ.4.50 கோடியாக அதிகரித்துள்ளது.
மாணவர்களுக்கு உடனடியாக இலவச பயண அட்டை...
கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட 10 மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தொழில்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 50 சதவீத சலுகை பயண அட்டைகளும், பொதுமக்களுக்கு பல்வேறு அளவிலான சலுகை கட்டண அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை இலவச பயண அட்டை வாங்காத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அடையாள அட்டை, கல்லூரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் போக்குவரத்து கழகங்களை அணுகி விண்ணப்பித்தால் உடனடியாக இலவச பயண அட்டை வழங்கப்படும் என கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...