இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள ஏதுவாக சோழர்களின் வரலாற்று தடயங்களை தேடி வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் திருப்புறம்பியம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டனர்.
சென்னை, மும்பை, பெங்களூரு, மதுரை ஆகிய ஊர்களில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என 20 பேர் அடங்கிய குழுவினர் சோழர்களின் வரலாறை தெரிந்து கொள்ள ஏதுவாக மாதம் ஒருமுறை சோழர்களின் ஆட்சிப் பகுதியில் உள்ள கோயில்கள், கட்டடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு நடைபெற்ற வரலாற்று சம்பவங்களை நினைவுகூர்ந்து, அதனை நாடகமாக அரங்கேற்றி குறிப்பெடுத்து வருகின்றனர்.
அதன்படி, இந்தக் குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அங்கு 1000 ஆண்டுகளுக்கு முன் அருண்மொழிவர்மனுக்கும், பாண்டிய நாட்டு மன்னனுக்கும் இடையே போரிடுவதற்கு முன் நடைபெற்ற சொற்போரினை நாடகமாக நடித்து காட்டினர். இதனை கிராம மக்களும் பார்வையிட்டனர்.
பின்னர், முதலாம் ராஜேந்திரசோழன் கட்டிய தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், ராஜராஜசோழனின் மனைவி லோகமாதேவி கட்டிய திருவையாறு கோயில், ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோயில் ஆகியவற்றை பார்வையிட்டு, கோயிலில் உள்ள சிற்பங்கள், கட்டுமானங்கள், கல்வெட்டுகள், மெய்கீர்த்திகள் ஆகியவற்றை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் சென்னை ஆனந்த் கூறியது: தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டும் பொன்னியின் செல்வன் நாவல் வழித்தொடரின் அத்தியாயமாக ஒற்றன் பாதை என்ற சோழர்களின் அனைத்து மன்னர்களை பற்றிய ஆய்வை நாங்கள் நடத்தி வருகிறோம்.
சோழர்களுடைய நிர்வாக திறமையும், போர்களும், அரசவை, தலைமைப் பண்பை பற்றியும், அவர்கள் விட்டுச்சென்ற கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய கோயில்கள் பற்றியும் அறிந்து, அதனை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள இந்த சோழ மன்னர்களை பற்றிய வரலாற்று ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.
சனிக்கிழமை வீராணம் ஏரி, காட்டுமன்னார்குடி, கடம்பூர், கங்கைகொண்டசோழபுரம், ஞாயிற்றுக்கிழமை உடையாளூர், திருப்புறம்பியம், திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று சோழ மன்னர்களின் பாரம்பரியத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பதிவு செய்துள்ளோம்.
விரைவில் சோழமன்னர்களின் வரலாறு தொடர்பாக நாங்கள் அறிந்தததை இணையதளத்தில் பதிவு செய்ய உள்ளோம். இதன் மூலம் தமிழர் பாரம்பரியம், மரபுகளை, இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 100 கோடி மோசடி! தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா





