இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

குடந்தை அருகே அமரர் ஊர்தி - சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து:18 பேர் காயம்

கும்பகோணம் அருகே சுற்றுலா வேனும், அமரர் ஊர்தியும் புதன்கிழமை இரவு நேருக்கு நேர் மோதி கொண்டதில் 2 ஓட்டுநர்கள் உள்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர்.

Updated On :7 ஜூன் 2018, 8:53 am IST

கும்பகோணம் அருகே சுற்றுலா வேனும், அமரர் ஊர்தியும் புதன்கிழமை இரவு நேருக்கு நேர் மோதி கொண்டதில் 2 ஓட்டுநர்கள் உள்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர்.
சாலை விபத்தில் இறந்த திருப்பனந்தாள் அருகே உள்ள கீழக்காட்டூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் நவீன்குமாரின் (23) உடலுடன் அமரர் ஊர்தி ஒன்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து கீழக்காட்டூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அதேநேரம், கும்பகோணத்தை அடுத்த கள்ளப்புலியூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோருடன் சுற்றுலா வேன் ஒன்று திருவள்ளியங்குடியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு,  மீண்டும் கள்ளப்புலியூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
சுற்றுலா வேனும், அமரர் ஊர்தியும் கள்ளப்புலியூர் தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தன. அப்போது,  அப்பகுதியில் லேசான மழை பெய்து கொண்டிருந்த நிலையில்,  கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணன் (28) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் (டாடா ஏஸ்) அமரர் ஊர்தியை முந்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறிய சரக்கு வாகனம் அமரர் ஊர்தியிலும், சுற்றுலா வாகனத்திலும் மோதி திரும்பியுள்ளது. இதில் தடுமாறிய சுற்றுலா வேன், அமரர் ஊர்தி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சுற்றுலா வேன் ஓட்டுநர் மோகன் (37), அமரர் ஊர்தி ஓட்டுநர் அன்பழகன் (35), 2 வேன்களிலும் இருந்த பயணிகள் காந்தி நகரைச் சேர்ந்த சந்தோஷ் மனைவி மாதவி (21),  ராமச்சந்திரன் (35), சுரேந்தர் (25), தமிழரசி (40), தினேஷ் (21), காளிதாஸ் மனைவி சங்கீதா (25), மகாராணி (32), பட்டுசாமி (22),  கோகுல் (22), கண்ணன் (45), ஜெயமணி (40), கோமதி (26), அமர்நாத் (18), கல்யாணி (55), செந்தமிழ்செல்வன் (48), டாடா ஏஸ் ஓட்டுநர் சரவணன் ஆகிய 18 பேர் படுகாயமடைந்தனர்.
 சம்வபத்தைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.