சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தஞ்சாவூரில் திருக்கோயில் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு

தஞ்சாவூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின்

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

தஞ்சாவூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தினர்.
இதில்,  ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரை அடிப்படையில் திருக்கோயில் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணைப்படி பணிக்கொடை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை அகற்ற அரசாணைப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ள கோயில் பணியாளர்களுக்கு முதுநிலைப் பணியாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். 
ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
திருக்கோயில் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலர் வி. கண்ணன் தலைமை வகித்தார். முதுநிலைத் திருக்கோயில் தொழிலாளர் சங்க மாநிலத் துணைச் செயலர் டி. சங்கர், ஓய்வு பெற்ற செயல் அலுவலர் சங்கத் துணைத் தலைவர் டி. கோவிந்தராஜூ,  முன்னாள் மாநிலத் தலைவர் முத்துகிருஷ்ணன்,  அரண்மனை தேவஸ்தானம் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.