எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நோயாளிகளின் உடனடி சிகிச்சைக்கு "டெலி ரேடியாலஜி' அமைப்பு

தமிழகத்தில் உள்ள 75 அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏதுவாக டெலி ரேடியாலஜி (தொலை கதிரியல்)அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :2 மார்ச் 2018, 4:13 am

கோபாலகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள 75 அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏதுவாக டெலி ரேடியாலஜி (தொலை கதிரியல்)அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 48 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 150}க்கும் மேற்பட்ட வட்ட மருத்துவமனைகள்,  400}க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1500}க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் பொதுமக்களுக்கு சேவை அளித்து வருகின்றன.
இதில், மருத்துவக் கல்லூரி, மாவட்ட தலைமை, வட்ட மருத்துவமனைகள் பலவற்றில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் வசதிகள் உள்ளன. மேற்கண்ட மருத்துவமனைகளில் விபத்து மற்றும் பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளான நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த நோயாளிகளுக்கு உறுப்புகளின் தன்மை, சேதம் மற்றும் நோயின் தீவிரம் குறித்து அறிய டாக்டர்களுக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள் அத்தியாவசியமாகிறது. சோதனைகளின் முடிவுகளில் கிடைக்கும் அறிக்கைகளின் அடிப்படையிலேயே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இப்படி அத்தியாவசியமாக விளங்கும் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்ள மருத்துவமனைகளில் நுண்கதிர் சிகிச்சை நிபுணர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியில் இருப்பர். இதில் தொழில்நுட்ப வல்லுநர்கள் நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டாலும், நுண்கதிர் சிகிச்சை நிபுணர்களின் பணி மிக முக்கியமானது. அவர்களே நோயாளிக்கு என்ன பாதிப்பு, என்ன நோய், எவ்வளவு வீரியம் என்பதை துல்லியமாக கணித்து,  மருத்துவர்களுக்கு தெரிவிப்பர்.
அப்படி நுண்கதிர் சிகிச்சை நிபுணர்கள் இல்லாத நேரத்தில், பரிசோதனை முடிவுகளை இணையதளம் மூலம் வேறிடங்களில் உள்ள நுண்கதிர் சிகிச்சை நிபுணர்களுக்கு அனுப்பி,  அவர்களது கருத்தை அறிந்து சிகிச்சை அளிக்கும் முறையே டெலி ரேடியாலஜி (தொலை கதிரியல்) எனப்படும். தற்போது தமிழகத்தின் முக்கியமான 75 மருத்துவமனைகளில் முதல்கட்டமாக ரூ.3 கோடி செலவில் டெலி ரேடியாலஜி அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் மருத்துவப் பணிகள் கழகத்தைச் சேர்ந்த உயரதிகாரி கூறியது: இந்த அமைப்புக்காக சில இடங்களில் டவர்களும், மருத்துவமனைகளில் சர்வர் அமைப்பையும் ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும். அப்போது அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மிகுந்த பயனடைவார்கள் என்றார் அவர்.

நுண்கதிர் சிகிச்சை நிபுணர்களுக்கு மடிக்கணினி!
டெலி ரேடியாலஜி அமைப்பை செயல்படுத்துவதற்காக 75 மருத்துவமனைகளில் பணியாற்றும் நுண்கதிர் சிகிச்சை நிபுணர்களுக்கு முதல்கட்டமாக 100}க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், மற்ற மருத்துவமனைகளிலிருந்து நுண்கதிர் சிகிச்சை நிபுணர்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பப்படும் பரிசோதனை முடிவுகளைத் தெரிவிக்க மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு ஆலோசனை செய்து வருகிறோம் என தமிழக அரசின் மருத்துவப் பணிகள் கழகத்தைச் சேர்ந்த உயரதிகாரி தெரிவித்தார்.

செயல்படும் முறை...!
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுண்கதிர் சிகிச்சை நிபுணர் ஏ. சீனிவாசன் கூறியது:
 தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நுண்கதிர் சிகிச்சை நிபுணர்கள் 24 மணி நேரமும் இருக்க முடியாத சூழ்நிலையிலும்,  நகரின் உள்புறப் பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நுண்கதிர் சிகிச்சை நிபுணர்கள் இல்லாத நிலையிலும் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஆகிய பரிசோதனை அறிக்கைகளின் தன்மைகளை அறிய டெலி ரேடியாலஜி அமைப்பு உதவும். இதில், பிரத்யேக மென்பொருள் மூலம் இணையதளத்தின் துணை கொண்டு நோயாளிகளின் பரிசோதனை அறிக்கைகள் அருகிலுள்ள நுண்கதிர் சிகிச்சை நிபுணர்களுக்கு அனுப்பப்படும். அவர் இந்த அறிக்கைகளைப் பார்த்து, நோய் பாதிப்பு, உறுப்பு பாதிப்பு, தன்மை உள்ளிட்டவற்றை அறிந்து, அதனை அறிக்கையாகவோ அல்லது செல்லிடப்பேசி தகவலாகவோ திரும்ப குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார். இதைப் பெறும் மருத்துவர்கள்,  அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும். இதன் மூலம் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவம் பார்த்து, அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.