4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஜெகந்நாதபெருமாள் கோயிலில் நாளை ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம்

கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு மே 22 ஆம் தேதி  ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெறவுள்ளது.

Updated On :21 மே 2018, 1:58 am

கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு மே 22 ஆம் தேதி  ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி, மே 22-ஆம் தேதி வளர்பிறை அஷ்டமி என்பதால் செண்பகவல்லி தாயாருக்கு காலை ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமமும், தொடர்ந்து மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கர்ய சபா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.