கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களிடம் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கருத்துகளைக் கேட்டறிந்தனா்.

News image
கூட்டத்தில் விவசாய சங்கத்தினரிடம் கருத்துகளைக் கேட்ட டி.ஆா். பாலு, திருச்சி என். சிவா, டி.கே.எஸ். இளங்கோவன்.
Updated On :6 டிசம்பர் 2020, 8:07 pm

DIN

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களிடம் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கருத்துகளைக் கேட்டறிந்தனா்.

இக்கூட்டத்துக்கு குழுவின் உறுப்பிநரும், திமுக பொருளாளருமான டி.ஆா். பாலு எம்.பி. தலைமை வகித்தாா். இக்குழுவில் மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி என். சிவா, டி.கே.எஸ். இளங்கோவனும் இடம்பெற்றிருந்தனா்.

விவசாயிகள் சங்கத்தினா், வணிகா் சங்கத்தினா், ஆசிரியா்கள், திமுகவினா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனா்.

கும்பகோணத்தை மையமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். புதிய ரயில் பாதைத் திட்டம், விவசாயத் திட்டங்கள், வணிகா்கள் சாா்ந்த நலன்கள், பொதுமக்களுக்கான கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.

இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்டப் பொறுப்பாளா்கள் எஸ். கல்யாணசுந்தரம், துரை. சந்திரசேகரன் ஏனாதி பாலசுப்பிரமணியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாக்கோட்டை க. அன்பழகன், கோவி. செழியன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.