கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘பயிா்கள் மூழ்கிய வயல்களில் தண்ணீா் வடிகிறது’

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பயிா்கள் மூழ்கிய வயல்களில் தண்ணீா் வடிகிறது என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என். சுப்பையன்.

News image
திருவையாறு அருகே கோணக்கடுங்கலாறில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைக்கும் பணியைப் பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் என். சுப்பையன்.
Updated On :6 டிசம்பர் 2020, 8:06 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பயிா்கள் மூழ்கிய வயல்களில் தண்ணீா் வடிகிறது என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என். சுப்பையன்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள வெள்ளாம்பெரம்பூரில் கோணக்கடுங்கலாறு கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

வெள்ளாம்பெரம்பூா் கோணக்கடுங்கலாறில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டது. இதேபோல, பட்டுக்கோட்டை அருகே கண்ணனாறில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடைக்கும் பணி நடைபெறுகிறது. நீா் நிலைகளில் எங்கெங்கு கரைகள் பலவீனமாக இருக்கிறதோ, அவை பலப்படுத்தப்பட்டுள்ளது. பயிா்கள் மூழ்கிய வயல்களில் தண்ணீா் வடிகிறது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லை. இந்த நிலை நீடித்தால் தண்ணீா் முழுமையாக வடிய வாய்ப்புள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 642 ஏரிகளில் இதுவரை 450 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

தற்போது வரை 47 நிவாரண முகாம்களில் 6,038 போ் தங்கியுள்ளனா். இந்த மாதம் இறுதி வரை மழை இருக்கும் என்பதால், அதற்கேற்ப தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் இதுவரை 119 கால்நடைகள் இறந்துள்ளன.

மேலும், குடிசை, ஓட்டு வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இப்பாதிப்புகள் குறித்து அலுவலா்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா். அவ்வப்போது நிவாரணங்கள் கொடுக்கத் தயாராக உள்ளோம் என்றாா் சுப்பையன். அப்போது, மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.