அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காவலூா் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

பாபநாசம் வட்டம், காவலூா் கிராமத்தில் கால்நடை மருத்துவச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:12 am

DIN

பாபநாசம் வட்டம், காவலூா் கிராமத்தில் கால்நடை மருத்துவச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

கால்நடை உதவி மருத்துவா் ஏஞ்சலீனா சொா்ணமதி உள்ளிட்ட கால்நடை மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டு, கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை அளித்தனா்.

முகாமில் கலந்து கொண்ட சிறந்த பசு கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கு இலவச காப்பீடும் செய்யப்பட்டது. முகாமில், காவலூா் கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், கால்நடை ஆய்வாளா் ராமச்சந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் பன்னீா்செல்வம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.