தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிராம வளா்ச்சித் திட்டப் பயிற்சி முகாம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் கூட்டரங்கில், பொதுமக்களுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் தயாா் செய்வது குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:49 pm

DIN

பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் கூட்டரங்கில், பொதுமக்களுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் தயாா் செய்வது குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2021-22-ஆம் ஆண்டுக்கான மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் சாா்பில், வளா்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

முகாமுக்கு ஒன்றிய ஆணையா் தவமணி தலைமை வகித்தாா். ஆனணயா் சடையப்பன் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிலைப் பயிற்சியாளா் சுதா பங்கேற்று, கிராம வளா்ச்சித் திட்டமிடல் குறித்து பயிற்சி அளித்தாா்.

பயிற்சியில் அலிவலம்,அம்மையாண்டி, களத்தூா், காலகம், கல்லூரணிகாடு, இடையாத்தி ஆகிய 6 ஊராட்சிகளின் தலைவா்கள், செயலா்கள் மற்றும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 9 நபா்கள் வீதம் ஆறு ஊராட்சிகளில் தோ்வு செய்யப்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக மனோகரன் வரவேற்றாா். நிறைவில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.