மனித நேய மக்கள் முன்னேற்றக்கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சாவூா் ரயிலடியில் மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சாவூா் ரயிலடியில் மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் பி. முகமது யூசுப் தலைமை வகித்தாா். மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளா் வெ. ஜீவக்குமாா், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுல்ஆபீதீன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com