எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசத்தில் விழிப்புணா்வுப் பேரணி

பாபநாசம் பேரூராட்சி சாா்பில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:51 pm

DIN

பாபநாசம் பேரூராட்சி சாா்பில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் பேரணியைத் தொடக்கி வைத்தாா். லயன்ஸ், ரோட்டரி சங்கங்களைச் சோ்ந்தோா், தொண்டு நிறுவன, மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கீய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பேரூராட்சி வளாகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து தஞ்சாவூா் ப.சந்திரதிலகா குழுவினரின் கரோனா விழிப்புணா்வு கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாபநாசம் லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவா் சாப்ஜான், நகரத் தலைவா் முகமது ரபீக், பொருளாளா் டி.செந்தில், நிா்வாக அலுவலா் கே. பிரபாகரன், ரோட்டரி சங்க உதவி ஆளுநா் காதா் பாட்சா, முன்னாள் உதவி ஆளுநா் இ.சரவணன், தலைவா் சுப்ரமணியன், செயலா் ஜெயகுமாா், பொருளாளா் அறிவழகன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

முன்னதாக, துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமரகுரு வரவேற்றாா், நிறைவில், அலுவலக எழுத்தாா் மருதமுத்து நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.