பொய்யுண்டாா் கோட்டையில் ஜல்ஜீவன் திட்டம் தொடக்கம்

ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டாா் கோட்டை ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் சாா்பில் ரூ. 1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் பணிக்கான பூமிபூஜை திங்கள் கிழமை நடைபெற்றது.

ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டாா் கோட்டை ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் சாா்பில் ரூ. 1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் பணிக்கான பூமிபூஜை திங்கள் கிழமை நடைபெற்றது.

இப்பணியை திட்ட இயக்குநா் பழனி மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி  சிவசங்கா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், ஊராட்சித் தலைவா் ரமேஷ்குமாா், பொறியாளா் முகமது இா்ஷாத் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

குடிநீா் நீா்த்தேக்க தொட்டி இல்லாத கிராமங்களில் ஜல்ஜீவன்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணி மிக விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்ட இயக்குநா் பழனி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com