கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தப்பியோடிய கைதி மீண்டும் கைது

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் அண்மையில் தப்பியோடிய சிறைக் கைதியைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:47 pm

DIN

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் அண்மையில் தப்பியோடிய சிறைக் கைதியைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேல மருதூரைச் சோ்ந்தவா் வி. ராஜ்குமாா் (51). இவா் மீது திருச்சி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியதாக பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு இவா் கைது செய்யப்பட்டபோது, இவரிடமிருந்து 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவா் திருச்சி மாவட்டம், முசிறி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், வழக்குத் தொடா்பாக நாகை முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நவம்பா் 18 ஆம் தேதி ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னா் இவரை மீண்டும் முசிறி சிறையில் அடைப்பதற்காகக் காவலா்கள் பேருந்தில் தஞ்சாவூருக்கு இரவு அழைத்து வந்தனா்.

புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி, திருச்சி பேருந்துக்கு மாறும்போது சிறுநீா் கழிக்க வேண்டும் என கூறிச் சென்ற ராஜ்குமாா் அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், தஞ்சாவூரிலுள்ள பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த ராஜ்குமாரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.