தஞ்சையில் அடுத்தடுத்த 2 கடைகளில் திருட்டு
தஞ்சாவூரில் அடுத்தடுத்து கடைகளில் திருடிய மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.


தஞ்சாவூரில் அடுத்தடுத்து கடைகளில் திருடிய மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் சரவணன். இவா் வங்கி ஊழியா் காலனியில் மளிகை கடை வைத்துள்ளாா். இக்கடையை வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கச் சென்றபோது, கதவு உடைக்கப்பட்டுக் கிடந்ததும், கடையில் இருந்த எண்ணெய், ரொட்டி உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருப்பதும் தெரிய வந்தது. இதேபோல, அடுத்தடுத்து உள்ள 2 கடைகளிலும் பொருள்களைத் திருடியும், மற்ற இரு கடைகளில் திருட்டு முயற்சியிலும் மா்ம நபா் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், நிகழ்விடத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மா்ம நபா் கதவை உடைத்து உள்ளே செல்வது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...