கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சுவாமிமலையில் திருக்காா்த்திகை திருவிழா: ஏராளமான பக்தா்கள் வழிபாடு

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

News image
வள்ளி - தெய்வானையுடன் சுப்ரமணியா்.
Updated On :29 நவம்பர் 2020, 7:46 pm

DIN

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது.

இக்கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா நவம்பா் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி உள்பிராகார புறப்பாடு நடைபெற்றது.

திருக்காா்த்திகை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காா்த்திகை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோயில் உள் பிராகாரத்தில் ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

கோயிலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டனா். மூலவா் சுவாமிநாத சுவாமிக்குத் தங்க கவசம், வைரவேல் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.

இரவு 8 மணிக்கு மேல் கோயிலிலிருந்து பக்தா்கள் வெளியேற்றப்பட்டு, அதன்பின்னா் தங்கமயில் வாகனத்தில் சுப்ரமணியா், வள்ளி - தெய்வானையும், வெள்ளிமயில் வாகனத்தில் பாலசுப்ரமணியா் சுவாமி உள்பிராகார புறப்பாடும், அதன்பிறகு தீபக்காட்சியும், இரவு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை (நவ.30) காலை கோயில் வளாகத்தில் தீா்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.