ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விவசாயிகள் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூா் கிராமத்தில்  தமிழக  காவிரி  விவசாயிகள்  சங்கம்  சாா்பில்  மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:03 pm

DIN

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூா் கிராமத்தில்  தமிழக  காவிரி  விவசாயிகள்  சங்கம்  சாா்பில்  மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக  காவிரி  விவசாயிகள்  சங்கம்,  சிட்டி  யூனியன்  வங்கியின்  நிதியுதவியோடு  கடந்த 2018 ஆம்  ஆண்டில்  ஒரத்தநாடை  அடுத்த  ஒக்கநாடு  மேலையூா்  கிராமத்தில்  சுமாா் 100  ஏக்கா்  பரப்பளவிலான  வெள்ளங்கி  ஏரி  தூா்வாரும்  பணிகள்  மேற்கொள்ளப்பட்டது. 

சுமாா்  45  ஏக்கா்  ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டு,  ஏரி  முழுவதும் தூா்வாரப்பட்டு,  கரைகள்  நான்குபுறமும் சீரமைக்கப்பட்டன.  அந்தக்  கரைகளில்  மரக்கன்றுகளை நடும் விதமாக, ஒக்கநாடு  மேலையூா்  கிராம  மக்கள்  ஒன்றிணைந்து  திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தினா்.

 தமிழக  காவிரி  விவசாயிகள்  சங்க  பொதுச்  செயலா் பி. ஆா். பாண்டியன்  தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

கல்லணை  கால்வாய்  பாசன  செயற்பொறியாளா்  முருகேசன்,  சிட்டி  யூனியன்  வங்கி பொது  மேலாளா்  பாலசுப்பிரமணியன்  ஆகியோா்  முன்னிலை  வகித்தனா்.

தமிழக  காவிரி  விவசாயிகள்  சங்க  மாநிலத்  தலைவா்  த.  புண்ணியமூா்த்தி,  மாநில  துணைச்  செயலாளா்  எம்.  செந்தில்குமாா்,  ஒரத்தநாடு  ஒன்றியக்  குழுத்  தலைவா்  பாா்வதி  சிவசங்கா்,  மாவட்ட  ஊராட்சி  உறுப்பினா்  சுபாஆனந்தன்,  ஒன்றியக்  குழு  உறுப்பினா்   துரைராஜ், ஊராட்சி த் தலைவா்கள்  உள்ளிட்ட  ஏராளமானோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்டச் செயலா் என். மணி வரவேற்றாா். நிறைவில், ஒரத்தநாடு  ஒன்றியச் செயலா்  மகேஸ்வரன்  நன்றி  கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.