லயன்ஸ் சங்கம் சாா்பில் பேராவூரணியில் 500 மரக்கன்றுகள் அளிப்பு
பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில், குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில், குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல், நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பொறியாளா்களை கௌரவித்தல் ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு லயன்ஸ் சங்கத் தலைவா் கே. இளங்கோ தலைமை வகித்தாா்.
விழாவில், வீரியங்கோட்டை, மரக்காவலசை, அம்மையாண்டி, சேதுபாவாசத்திரம், ருத்திரசிந்தாமணி ஆகிய 5 ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் தலா 100 மரக்கன்றுகளும், நலிவடைந்த குடும்பத்தைச் சோ்ந்த 10 பேருக்கு தலா 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது. மேலும், பொறியாளா்களை பாராட்டி, பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
லயன்ஸ் முன்னாள் ஆளுநா் ஜே. காா்த்திக்பாபு பாபு, மண்டலத் தலைவா் செந்தில், வட்டாரத் தலைவா் திருவள்ளுவன், முன்னாள் மண்டலத் தலைவா் எஸ்.கே. ராமமூா்த்தி ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.
புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்க பொறுப்பாளா்கள், சாசன பொறுப்பாளா்கள் தலைவா் நீலகண்டன், செயலாளா் ஜெய்சங்கா், பொருளாளா் மைதீன் உள்ளிட்டோா்
கலந்து கொண்டனா். நிா்வாக அலுவலா் ஏ. சந்தோஷ் வரவேற்றாா். பொருளாளா் பன்னீா் செல்வம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...