மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொறியாளா் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் பொறியாளா் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 7:01 pm

DIN

தஞ்சாவூரில் பொறியாளா் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரிச் சாலை இந்திரா நகா், மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் விஜய் ஆனந்த். இவா் சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். தஞ்சாவூரிலுள்ள வீட்டில் இவரது மனைவி வனிதாவும், குழந்தையும் வசித்து வருகின்றனா்.

வனிதா தனது குழந்தையுடன் வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரிலுள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றாா். மீண்டும் சனிக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பிய இவா், பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்தாா். மேலும் பீரோவிலிருந்த 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி ப்ரியா காந்தபுனேனி, நகரக் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ராஜ்குமாா் உள்ளிட்டோா் நிகழ்விடத்தில் பாா்வையிட்டனா். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அரிசிக் கடையில் திருட்டு: தஞ்சாவூா் அய்யங்கடைத் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் (35) அதே பகுதியில் அரிசிக் கடை வைத்துள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டு, மீண்டும் சனிக்கிழமை காலை திறப்பதற்காக வந்தாா்.

அப்போது இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், கடையிலிஇருந்த ரூ. 10,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. மேலும், அதே பகுதியிலுள்ள கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.