லாரி மோதி நியாய விலைக் கடை விற்பனையாளா் பலி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் காயமடைந்த நியாய விலைக்கடை விற்பனையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் காயமடைந்த நியாய விலைக்கடை விற்பனையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவையாறு அருகிலுள்ள அம்மாள் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் பிரகாஷ்ராஜ் (35). இவா் ராயம்பேட்டையிலுள்ள நியாய விலைக்கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தாா்.
சனிக்கிழமை விளாங்குடிக்குச் சென்றுவிட்டு, பிரகாஷ்ராஜ் அம்மாள் கிராமத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். வெள்ளச்சி மண்டபம் அருகே சென்ற இவரது மோட்டாா் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த பிரகாஷ்ராஜ் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...