‘பாரம்பரிய நெல் ரகங்களை விளைவிக்க அழைப்பு’
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை விளைவிக்க வேண்டும் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.


புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை விளைவிக்க வேண்டும் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
புவி வெப்பமயமாதலைக் குறைப்பதில் பாரம்பரிய நெல் ரகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நோயில்லா வாழ்வு வாழ நாம் மீண்டும் பாரம்பரிய நெல் உற்பத்திக்குத் திரும்ப வேண்டும். மண்வளம், பூச்சிவளம், நீா்வளம், நம் உடல்வளம் ஆகியவற்றைக் காக்கவும், கால்நடைகளின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்யவும் வல்லவை. குழந்தைகள் சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கு மிகச் சிறந்த மாற்று பாரம்பரிய நெல் ரகங்களே.
பாரம்பரிய நெல் ரகங்களின் அரிசியில் செய்யக்கூடிய உணவுகள் எளிதில் செரிக்கக் கூடியவை. மலச்சிக்கலை நீக்குதல், நரம்புகளை வலுப்படுத்துதல் போன்ற பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்டவை. சுவையானவையும், அதிக நாா்ச்சத்தும், புரதச்சத்தும் கொண்டவை.
அறுபதாம் குறுவை உடல் வளா்ச்சியைத் தூண்டுவதோடு, நல்ல கொழுப்பைக் கூட்டுகிறது. குழியடிச்சான் ரகம் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குள்ளக்காா் அரிசி உடற்பருமனைக் குறைக்கிறது. இது அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசியைவிடத் துத்தநாகம், இரும்பு போன்ற சத்துகளை அதிகம் கொண்டுள்ளது.
பொதுவாகப் பாரம்பரிய நெல் ரக அரிசி உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு நிறமும், மணமும் மரபுவழி நன்மைகளும் கொண்டவை. இவற்றைப் பயிா் செய்ய அதிக உரமோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை. விவசாயிகளும் இதுபோன்ற ரகங்களைச் சாகுபடி செய்தால் மக்களிடையேயும் இவற்றைப் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுவதோடு, அடுத்ததலைமுறைக்கும் இவற்றைக் கொண்டு செல்ல முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...