மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசே வீடு கட்டித் தருகிறது’

நாட்டிலேயே முதன்முறையாக கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழ்நாடு அரசே ஆண்டுக்கு 25 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருகிறது எனப் பெருமிதம் தெரிவித்தாா்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:32 pm

DIN

நாட்டிலேயே முதன்முறையாக கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழ்நாடு அரசே ஆண்டுக்கு 25 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருகிறது எனப் பெருமிதம் தெரிவித்தாா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வ ாரியத் தலைவா் பொன்குமாா்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது :

தொழிலாளா் நல வாரியங்களில் தேங்கிக் கிடந்த 50 ஆயிரம் விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 200 பேருக்கு முதற்கட்டமாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல, நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 25 ஆயிரம் வீடுகள் கட்டுமானத் தொழிலாளா்களுக்காக கட்டப்பட உள்ளதாக முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது, 38,821 கட்டுமானத் தொழிலாளா்களும், 21,905 அமைப்பு சாரா தொழிலாளா்களும் வாரியங்களில் உறுப்பினா்களாக உள்ளனா் என்றாா் பொன்குமாா்.

கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தலைமைவ கித்தாா். தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் த. தா்மசீலன், உதவி ஆணையா் வெ. தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.