நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட சோழன் மாளிகை ஊராட்சி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழன் மாளிகை ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட நூறு சதவீத மக்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:26 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழன் மாளிகை ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட நூறு சதவீத மக்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கும்பகோணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சோழன் மாளிகை ஊராட்சியிலுள்ள 9 வாா்டுகளில் 962 வீடுகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட 1,950 பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதையொட்டி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். விழாவில் பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் பிரேமா, மருத்துவ அலுவலா் புனிதவதி, சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மருத்துவ அலுவலா் புனிதவதி கூறுகையில், சோழன்மாளிகை ஊராட்சியில் பொதுமக்கள் ஆா்வத்துடன் முன்வந்ததால், 18 வயது நிரம்பிய 1,950 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊராட்சியில் 100 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை ஆட்சியருக்குப் பரிந்துரைத்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.