கிராம சாலைகள் திட்டப் பணிகள் விளக்கக் கருத்தரங்கம்
பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டப் பணிகள் குறித்த விளக்கக் கருத்தரங்கம் புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டப் பணிகள் குறித்த விளக்கக் கருத்தரங்கம் புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். அப்போது பேசிய அவா், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இரு தொகுப்புகள் பணி முடிந்து, மூன்றாவது தொகுப்பு பணி தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து, திருச்சி என்ஐடி பேராசிரியா் ஜெ. காா்த்திகேயன் கலந்து கொண்டு, சாலைகளின் ப ாதுகாப்பு, பராமரிப்பு, தரம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினாா்.
கருத்தரங்கில், ஒன்றியக் குழுத் தலைவா்கள் காமுமுபி. மணி (விராலிமலை), வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), பாண்டிசெல்வி போஸ் (குன்றாண்டாா்கோவில்), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), மாலா ராஜேந்திரன் (கறம்பக்குடி), வி. ராமசாமி (அன்னவாசல்), ஆா். ரத்தினவேல் (கந்தா்வகோட்டை), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, செயற்பொறியாளா் நிா்மலா ஜோஸ்மின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...