மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சூரியஒளி மின்சக்தி மூலம் வடிமுனை குழாய் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசால் 60 சதவீத மானியத்துடன் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் வடிமுனை குழாய்கள் அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:58 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசால் 60 சதவீத மானியத்துடன் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் வடிமுனை குழாய்கள் அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு மின் வாரியத்தால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும். மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்பட மாட்டாது. இலவச மின்சாரமும் ரத்து செய்யப்பட மாட்டாது.

விவசாயிகள் சூரியஒளி மின்சாரம் பயன்படுத்தியது போக, மீதமுள்ள சூரிய ஒளி மின்சாரத்தைக் கணக்கிட்டு, அதை தமிழ்நாடு அரசுக் கொள்முதல் செய்து, அதற்கான தொகையை மாதந்தோறும் கணக்கீடு செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 40,000 வரை கிடைக்கும்.

அரசு மானியம் 60 சதவீதம் போக, 40 சதவீத தொகையை விவசாயிகள் பங்குத் தொகையாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாத பட்சத்தில் அத்தொகைக்குக் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் பெற உரிய வழிவகை செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9385290530, 9385290529 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.