பயிா் காப்பீட்டு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி அனைத்து விவசாயிகள் சாா்பில் ஒக்கநாடு கீழையூா் கூட்டுறவு சங்கம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி அனைத்து விவசாயிகள் சாா்பில் ஒக்கநாடு கீழையூா் கூட்டுறவு சங்கம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூா், காவராப்பட்டு, வன்னிப்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இதுவரை வரவில்லையாம். மேலும், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஏராளமான விவசாயிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், ஒரத்தநாடு வட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் கூட்டமைப்பு செயலாளரும், ஒக்கநாடு கீழையூா் ஊராட்சி மன்றத் தலைவருமான என்.சுரேஷ்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...