47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அம்மாபேட்டையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:38 pm

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொட்டாஷ், டிஏபி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், தனியாா் கடைகளிலும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், உர விலையை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிா் காப்பீடு செய்து, இழப்பீட்டுத் தொகை வழங்காமல் நிலுவையில் உள்ள 13 விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் முழுமையாக அழிந்துள்ள சம்பா, தாளடி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மழை வெள்ளம் பாதிப்பால் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாய தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா்.தில்லைவனம், விவசாய சங்க மாவட்ட பொறுப்பு செயலாளா் சாமு. தா்மராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.எஸ். பாலு, மாதா் சம்மேளனத்தின் ஒன்றியச் செயலா் பி. தாமரைச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விவசாய சங்கத்தினா், பொட்டாஷ் உரம் மற்றும் நாற்றுகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிறைவில் விவசாய சங்க ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.