ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வயலில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் திருட்டு

ஒரத்தநாடு அருகே வயலில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:11 pm

DIN

ஒரத்தநாடு அருகே வயலில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (52). தஞ்சையில் உள்ள தனியாா் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு சொந்தமான டிப்பரை மண்டலக்கோட்டை சாலையிலுள்ள தனது வயலில் செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தி வைத்திருந்தாா்.

இந்நிலையில், வயலில் போடப்பட்டிருந்த இரும்பு கேட்டை மா்ம நபா்கள் உடைத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிப்பரை திருடிச் சென்றனா். இதுகுறித்து புதன்கிழமை அறிந்த குணசேகரன், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் அடிப்படையில், ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து டிப்பரை திருடி சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.