தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தாலும் எதுவும் ஏற்படாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அதிமுகவுக்கு சசிகலா மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:25 am

DIN

அதிமுகவுக்கு சசிகலா மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: சசிகலா முழுக் குணமடைந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பெங்களூருவில் அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வந்தது உள்கட்சி பிரச்னை. அது பற்றி நான் கருத்து கூற முடியாது. அவர் அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. 

இத்தேர்தலில் அதிமுக கூட்டணி கண்டிப்பாக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் சில மாதங்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு 10 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும், விவசாயிகளின் ஒரு கோரிக்கை கூட ஏற்கப்படவில்லை.

மாறாக விவசாயிகள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவியுள்ளது. இது ஜனநாயக நாடாகத் தெரியவில்லை. இந்த நிலைமை நீடித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்.

தமிழகத்துக்கு ராகுல்காந்தி வருகைக்குப் பிறகு காங்கிரசுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அவர் மீண்டும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு அவர் தமிழகத்துக்கு வரவுள்ளார். எனவே காங்கிரசுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதற்கேற்றவாறு தொகுதிகள் எண்ணிக்கை அமையும் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

பின்னர் அவர் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.