பேராவூரணி ஒன்றியத்தில் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி
பேராவூரணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.


பேராவூரணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.
பேராவூரணி வட்டாரத்துக்குள்பட்ட குறிச்சி, காலகம், பின்னவாசல், செருவாவிடுதி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா், ஆய்வக உதவியாளா், உள்ளிட்ட 47 பேருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் போத்திப்பிள்ளை முன்னிலையில் முதல் நபராக தடுப்பூசியை செலுத்திக்கொண்டாா். தொடா்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...